“கத்தி” படம் தனக்கு பெரிய இடத்தை பிடித்து தரும்: சமந்தா தெரிவிப்பு.

பாணா காத்தாடி சமந்தா, தெலுங்கில் பல ஆண்டுகளாக முன்னணியில் இருப்பவர். தமிழிலும் அதேபோன்று முன்னணி இடத்தை பிடிக்க ஏற்கனவே முயற்சி எடுத்தார். அப்போது கடல் படத்தில் மணிரத்னமும், ஐ படத்தில் ஷங்கரும் அவருக்கு சான்ஸ் கொடுக்க முன்வந்தனர். ஆனால், கடல் படத்தின் படப்பிடிப்பு நடந்தபோது திடீரென்று அவரது உடம்பில் அலர்ஜி ஏற்பட்டது.

அதனால் உடனடியாக சிகிச்சைக்கு சென்ற சமந்தாவிடம், அதிக வெளிச்சம் பாய்ச்சும் லைட்களுக்கு முன்பு நின்றதால் ஏற்பட்ட தோல் அலர்ஜிதான் இது என்று சொன்ன மருத்துவர்கள். அவரை உடனடியாக சிகிச்சை செய்யுமாறு அறிவுறுத்தினர்.
அதனால், சினிமாவா, சிகிச்சையா என்று யோசித்த சமந்தா, தோல் அலர்ஜி நோய் தன்னை ஆக்ரமித்து விட்டால் அதன் பிறகு சினிமாவே இல்லை என்றாகி விடும் என்பதால், கமிட்டான கடல், ஐ படங்களில் இருந்து வெளியேறி சிகிச்சையில் ஈடுபட்டார். ஆனபோதும் தமிழ் சினிமாவிலும் சாதிக்க வேண்டும் என்ற வேட்கை அவரை துரத்தியதால் தற்போது அஞ்சான், கத்தி படங்களில் நடித்துள்ளார்.

இந்த படங்களில் வேறு ஹீரோயின் இல்லை. சமந்தா மட்டுமே சிங்கிள் ஹீரோயினாக நடித்துள்ளார். அதிலும் இதுவரை எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்காத அளவுக்கு கிளாமர் குயினாகவும் நடித்துள்ளார். இந்த படங்களில் விஜய்யுடன் நடித்துள்ள கத்தி படத்தை பெரிய அளவில் தான் எதிர்பார்ப்பதாக கூறி வருகிறார். காரணம், இந்த படத்தில் சமந்தாவை வெறும் டூயட்டுக்கு மட்டுமே பயன்படுத்தாத ஏ.ஆர்.முருகதாஸ், ஏழாம் அறிவு படத்தில் ஸ்ருதிஹாசனை யூஸ் பண்ணியதுபோல் சமந்தாவின் கேரக்டருக்கும் கதையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளாராம். அதனால், இந்த கத்தி படம் தமிழில் எனக்கு பெரிய இடத்தை பிடித்துத்தரும் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார் சமந்தா.