1975ல் அபூர்வ ராகங்கள் என்ற படத்தில் அறிமுகமான ரஜினிகாந்த், தனது 40 ஆண்டுகால திரைப்பயணத்தில் இதுவரை 170 படங்களில் நடித்து விட்டார். இந்நிலையில் தனது 171வது படமான லிங்காவில் இரண்டு வேடங்களில் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹாவின் மகள் சோனாக்ஷி சின்ஹாவும், அனுஷ்காவும் நடித்து வருகிறார்கள்.
தற்போது கர்நாடகாவில் உள்ள ஷிமோகாவில் லிங்காவின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. சிலநாட்கள் ரஜினியுடன் சோனாக்ஷியும் நடித்துள்ளார். ஆனால் அப்போது அவரை ஒரு மட்டமான ஹோட்டலில் தங்க வைத்தார்களாம். இதனால் மனசுடைந்து போன சோனாக்ஷி இதை தனது டுவிட்டரில் கோபத்துடன் வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்த செய்தி படக்குழு மற்றும் ரஜினிக்கும் தெரியவர, அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். காரணம், ஷிமோகாவில் பெரிய அளவில் ஹோட்டல் வசதிகள் இல்லையாம். அதனால் அங்கு இருந்த ஹோட்டல்களில் நல்ல ஹோட்டலாக பார்த்துதான் சோனாக்ஷியை தங்க வைத்தார்களாம். ஆனால் நிலைமை தெரியாத சோனாக்ஷிதான் அவசரப்பட்டு இப்படி செய்தி வெளியிட்டிருக்கிறார் என்று அவர்கள் தரப்பில் கூறுகிறார்கள்.
இதையடுத்து, லிங்கா படக்குழுவினர் சோனாக்ஷி சின்ஹாவை தொடர்பு கொண்டு நிலைமையை புரிய வைத்த பிறகு, தனது டுவிட்டரில் இருந்து அந்த செய்தியை டிலிட் செய்து விட்டாராம் சோனாக்ஷி.

cinema, rajini, linga, sonakchi sinha, anushka, shimoka, hotel, twitter