சின்னச்சின்ன நாய்க்குட்டி
சிங்கார நாய்க்குட்டி
வண்ண வண்ண நாய்க்குட்டி
மின்னல் போல துள்ளிடும்
வாலை ஆட்டும் நாய்க்குட்டி
பொன்னைப் போன்ற வண்ணமும்
பொலிவுமிக்க வதனமும்
மேனி கொண்ட நாய்க்குட்டி
காலைக்காலை சுற்றி வந்து
பாலைப்பாலை கேட்டிடும்
பாலை தட்டில் ஊற்றி வைக்க
வாலையாட்டிக் குடித்திடும்
காலை மாலை வேளையில்
காற்று வாங்கச் சென்றிடும்
சோற்றைக் கேட்டு நின்றிடும்
நல்ல நல்ல நாய்க்குட்டி
நயமுடைய நாய்க்குட்டி
நாக்கை நாக்கை நீட்டிடும்
மூக்கை மூக்கை நக்கிடும்
கன்னத்தோடு கன்னம் வைத்து
கொஞ்சும் எந்தன் நாய்க்குட்டி
சிங்கார நாய்க்குட்டி
வண்ண வண்ண நாய்க்குட்டி
மின்னல் போல துள்ளிடும்
வாலை ஆட்டும் நாய்க்குட்டி
பொன்னைப் போன்ற வண்ணமும்
பொலிவுமிக்க வதனமும்
மேனி கொண்ட நாய்க்குட்டி
காலைக்காலை சுற்றி வந்து
பாலைப்பாலை கேட்டிடும்
பாலை தட்டில் ஊற்றி வைக்க
வாலையாட்டிக் குடித்திடும்
காலை மாலை வேளையில்
காற்று வாங்கச் சென்றிடும்
சோற்றைக் கேட்டு நின்றிடும்
நல்ல நல்ல நாய்க்குட்டி
நயமுடைய நாய்க்குட்டி
நாக்கை நாக்கை நீட்டிடும்
மூக்கை மூக்கை நக்கிடும்
கன்னத்தோடு கன்னம் வைத்து
கொஞ்சும் எந்தன் நாய்க்குட்டி
kids song,tamil kids song,dog song