சுந்தர்.சியின் செண்டிமெண்ட் நடிகராம் சந்தானம்!

விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் சந்தானம்தான் பிரதான காமடியன். அந்த படம் வெற்றி பெறாதபோதும் சந்தானத்தின் காமடிக்காக சில நாட்கள் ஓடியது. அதையடுத்து மதகஜராஜா படத்திலும் சந்தானம் இடம்பெற்றார. ஆனால் அந்த படம் சில காரணங்களால் கிடப்பில் கிடக்கின்றது. இந்த நிலையில், தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் ஆம்பள படத்திலும் நடிக்கிறார் சந்தானம்.

விஷாலைப் பொறுத்தவரை சந்தானம் தனது பிரதான காமெடியனாக நினைக்கவில்லை என்றபோதும், சுந்தர்.சியோ அவரை தனது செண்டிமென்ட் நடிகராக நினைக்கின்றார். காரணம், தனது இயக்கத்தில் சந்தானம் நடித்த கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை போன்ற படங்கள் தொடர்ச்சியாக ஹிட் என்பதால் எனக்கு சந்தானம் கண்டிப்பாக தேவை என்று சொல்லி ஆம்பள படத்திலும் அவரை நடிக்க வைக்கிறார்.
அத்தோடு, எனது படங்களில் நடிப்பதற்கு கதையும் கேட்பதில்லை. காசும் கேட்பதில்லை. நான் என்ன ரோல் கொடுத்தாலும் நடிப்பார். என்ன காசு கொடுத்தாலும் எண்ணிப்பார்க்காமல் வாங்கி கொள்வார். அந்த அளவுக்கு, கலைக்கும், கலைஞனுக்கும் முக்கியத்துவம் கொடுக்கக்கூடியவர் சந்தானம் என்று கூறும் சுந்தர்.சி, இந்த ஆம்பள படத்திற்கு சந்தானத்திடம் கால்சீட் கேட்டபோது ரஜினி சாரின் லிங்க படத்திற்கு மொத்த கால்சீட் கொடுத்து விட்டேன் என்று கை விரித்து விட்டாராம். இருப்பினும், சந்தானம் எப்போது கால்சீட் தருகிறாரோ அப்போது காமெடி காட்சிகளை படமாக்க திட்டமிட்டிருக்கிறாராம் சுந்தர்.சி.