சிரஞ்சீவியின் 150வது படம் இன்று அறிவிப்பு?

தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி இன்று தனது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். அரசியலில் இருந்து ஒதுங்க ஆரம்பித்துள்ள சிரஞ்சீவி இன்று அவருடைய 150வது படத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே அது பற்றிய செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. ஆனால், கதை இன்னும் முடிவாகாததால் அறிவிப்பு தாமதமாக வெளியிடப்படலாம் என்றும் சொல்கிறார்கள். இருந்தாலும் சிரஞ்சீவி நடிக்கப் போகும் அவருடைய 150 வது படம் ஒரு கலகலப்பான நகைச்சுவை கலந்த ஆக்ஷன் படமாக இருக்கும் என டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு சிரஞ்சீவி குடும்பத்தாருடன் நேபாளத்திற்கு சென்றுள்ளார். அதனால் சிரஞ்சீவியின் பிறந்த நாளை அவருடைய மகனும் நடிகருமான ராம் சரண் ஐதராபாத்தில் ரசிகர்கள் முன்னிலையில் விமரிசையாக கொண்டாட உள்ளார். சிரஞ்சீவியின் 150 வது படத்தை இயக்கப் போவது வி.வி. விநாயக் என செய்திகள் வந்தாலும், இன்னும் அது பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. ஆனால், எந்த வித கருத்தையும் சொல்லாத படமாக அது இருக்கும், எந்த சரித்திரப் பின்னணியும் கொண்ட கதையாக இல்லாமல் இருக்கும் என்று மட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சிரஞ்சீவி நடிக்க வருவதால் அவருடைய ரசிகர்களை முற்றிலும் திருப்திப்படுத்தும் விதமாக மட்டுமே இருக்கும் என்கிறார்கள்.

சிரஞ்சிவியின் ஆரம்ப கால திரையுலக வாழ்க்கை சென்னையில்தான் ஆரம்பமானது என்பது குறிப்பிடத்தக்கது. அவர் சென்னையில்தான் நடிப்புப் பயிற்சி பயின்றார். தமிழில் ரஜினியுடன் 'ராணுவ வீரன்' படத்தில் வில்லனாகவும், பாலச்சந்தர் இயக்கத்தில் '47 நாட்கள்' படத்திலும் நாயகனாகவும் நடித்திருக்கிறார். அதன் பின் தெலுங்கில் நாயகனாகி அவர் நடித்த பல படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு இங்கும் வெற்றி பெற்றுள்ளன.

திரையுலகைப் பொறுத்தவரை முடிசூடா மன்னனாக இருக்கும் சிரஞ்சீவியின் அரசியல் வாழ்க்கை எதிர்பார்த்த அளவில் இல்லாததால் அவர் மீண்டும் நடிக்க முடிவெடுத்திருக்கிறார் என்றும் பலர் சொல்லி