வீரம் படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்புகள் இல்லாததால் சிவகார்த்திகேயன் நடிக்கும் ரஜினி முருகன் படத்தில் நடிப்பதற்கு கூட தயாராகயிருந்தார் தமன்னா. ஏற்கனவே லிங்குசாமியின் பையா படத்தில் நடித்திருந்ததால், அவரே ரஜினி முருகனை தயாரிக்கயிருப்பதால் அந்த நட்பு அடிப்படையில் அந்த படத்தை கைப்பற்றினார் தமன்னா.
ஆனால், இப்போது பார்த்தால், தமன்னாவுக்கு மார்க்கெட் இல்லாததை காரணம் காட்டி அவரை ஓரங்கட்டி விட்டனர். அவருக்குப்பதிலாக மாஜி மலையாள நடிகை மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியிருக்கிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தை இயக்கிய பொனராம் அப்படத்தை இயக்குகிறார்.
இந்த சேதி தமன்னாவுக்கு சென்றபோது அதிர்ச்சியாகி விட்டாராம். சிவகார்த்திகேயனுடன் நான் நடிக்க ஒத்துக்கொண்டதே பெரியவிசயம். ஆனால் முதலில் என்னிடம் கால்சீட் கேட்டு விட்டு இப்போது வேறு நடிகை பக்கம் சாய்ந்து விட்டார்களே என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார். இப்படி சிவகார்த்திகேயன் போன்ற ஹீரோக்களின் படங்களில் இருந்தே தமன்னா நீக்கப்பட்டு விட்டதால், பாஸ் என்ற பாஸ்கரன் படத்தின் 2ம் பாகத்தில் ஆர்யாவுடன் அவர் நடிப்பது கேள்விக்குறியாகி விடும் என்கிறார்கள்.