தீபாவளிக்கு பலத்த போட்டி இருக்கும் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது விஜய்யின் கத்தி, விஷாலின் பூஜை மட்டுமே உறுதிபடுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே ஜெயம்ரவியின் பூலோகமும் வரக்கூடும் என்கிறார்கள். மேலும், கத்தியின் டீஸர் வெளியாகி அதை 2 மில்லியனுக்கும மேற்பட்ட ரசிகர்கள் பார்த்ததாக கூறுகிறார்கள்.
இந்த நிலையில் கத்தி ட்ரெய்லர் எப்போது வரும் என்று தவம் கிடக்கிறார்கள் விஜய்யின் ரசிககோடிகள், ஆடியோ ரிலீஸில் இருந்தே டிரெய்லரை வெளியிட்டு விடுவார்கள் என்று எதிர்பார்த்த ரசிகர்கள், படமே தீபாவளிக்கு வெளியாகப்போகிறது என்கிறார்கள். பிறகு ஏன் இன்னமும ட்ரெய்லரை வெளியிடவில்லை என்று விஜய்யின் சமூக வலைதளத்திற்குள் புகுந்து கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், அவர்களுக்கு விடையளிக்கும் விதமாக, தற்போது அனைத்துகட்ட வேலைகளும் முடிந்து விட்டதால் கத்தி படத்தை இன்று(அக்டோபர் 10) வெள்ளிக்கிழமை சென்சாருக்கு அனுப்பப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்சார் அதிகாரிகள் படத்தை பார்த்து விட்டு ஆட்சேபத்திற்குரிய காட்சிகளை கத்தரித்து விட்டு மீண்டும் திரையிட்டு காட்ட சொல்வார்கள். அது ஒருபக்கம் நடந்தாலும், முன்னதாக ட்ரெய்லரை அவர்களை பார்க்க வைத்து நாளையே வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.