குட்டித்தூக்கம் போடாமல் நாட்டு நடப்பு பேசிய த்ரிஷா!

கடல் கெளதம் நடித்த என்னமோ ஏதோ படத்தில் நடித்தவர் கன்னட நடிகை நிகிஷா பட்டேல். அந்த படம் ஹிட்டாக அமையவில்லை என்றபோதும், தனது வசீகர தோற்றத்தினால் தமிழ் படவாய்ப்புகளை தக்க வைத்துக்கொண்டார். த்ரிஷா நடித்து வரும் ரம்பா ஊர்வசி மேனகா படத்தில் இவரும் ஒரு நாயகி.

அதோடு நகுல் நடித்து வரும் நாரதன் படத்திலும் சிங்கிள் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில், த்ரிஷாவுடன் தான் நடித்த அனுபவங்களை பக்கம் பக்கமாக ஸ்பாட் நண்பர்களிடம் கூறி வருகிறார் நிகிஷா. அதாவது, த்ரிஷா மற்ற நடிகைகளை மாதிரி இல்லை. தன்னுடன் நடிக்கும் வளர்ந்து வரும் நடிகைகளுக்கும் வழிவிட்டு செல்லக்கூடியவர். ரம்பா ஊர்வசி மேனகா படத்தில் அவருக்குத்தான் கதையில் முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.


ஆனபோதும், சில காட்சிகளில் எங்களது டயலாக்கையும் அதிகப்படுத்த சொன்னார். மேலும், தான் ஒரு சீனியர் நடிகை என்கிற எந்த பந்தாவும் செய்யாமல் எங்களுடன் சகஜமாக பழகி வந்த த்ரிஷா, சில காட்சிகளில் மற்ற நடிகர் நடிகைகள் ரிகர்சல் பார்ப்பதை கேள்விப்பட்டால் கேரவனில் இருந்து இறங்கி வந்து எங்களுடன் கலந்து கொள்வார்.

இதற்கெல்லாம் மேலாக, மதிய இடைவேளை நேரங்களில் குட்டித்தூக்கம் போடாமல், என்னுடன் நிறைய நேரத்தை அவர் ஷேர் பண்ணிக்கொண்டார். அப்போது சினிமாவைப் பற்றியும்,நாட்டு நடப்புகள் பற்றியும் நானும், த்ரிஷாவும் நிறையவே பேசிக்கொண்டோம் என்கிறார் நிகிஷா பட்டேல்.