தற்போதைய புது வரவு நடிகைகள் அனைவருக்குமே அஜீத்துடன் ஒரு படத்திலேனும் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் உள்ளது. அது சிலருக்கு மட்டுமே நிறைவேறுகிறது. பலருக்கு நிராசையாகி விடுகிறது.அந்த வகையில் தற்போது பீல்டில் இருக்கும் முன்னணி நடிகைகளான த்ரிஷா, நயன்தாரா இருவரும் அஜீத்துடன் சில படங்களில் நடித்து விட்டனர்.
அதேபோல் தமன்னாவுக்கு வீரம் படத்தில் லக் அடித்தது. அதையடுத்து அனுஷ்காவுக்கு தற்போது அவரது 55வது படத்தில் கிடைத்திருக்கிறது. ஆனால், ஹன்சிகாவுக்கு வேலாயுதம் படத்தையடுத்து தற்போது சிம்புதேவன் இயக்கும் படம் என இரண்டு படங்களில் விஜய்யுடன் நடிக்க சான்ஸ் கிடைத்து விட்டபோதும், அஜீத்துடன் மட்டும் ஒரு படத்தில்கூட நடிக்க சான்ஸ் கிடைக்கவில்லை.
ஆனால் தற்போது மார்க்கெட் உச்சத்தில் இருப்பதால் இந்த தருணத்தை விட்டு விடக்கூடாது என்று நினைக்கும் ஹன்சிகா, அதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்தி வருகிறார். அவர் எடுத்த முயற்சி காரணமாக, வீரம் படத்தை இயக்கிய சிறுத்தை சிவா, அடுத்து அஜீத்தை இயக்கும் படத்தில் ஹன்சிகா நடிப்பதற்கான சூழ்நிலை நிலவியிருக்கிறதாம். அந்த படத்திற்கு ஏற்கனவே சமந்தா, ஸ்ருதிஹாசன் என சில நடிகைகளும் போட்டிபோட்டு வரும் நிலையில், ஹன்சிகாதான் அந்த ரோலுக்கு பொருத்தமாக இருப்பார் என்று சிறுத்தை சிவாவே கூறி விட்டதாக ஹன்சிகாதரப்பில இருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.