சிம்புதேவன் இயக்கும் படத்தையடுத்து ராஜா ராணி அட்லி இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். அந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். அந்த வகையில் அது அவரது 50வது படமாகியிருக்கிறது. ஆக, அரை சதமடிக்கும் படம் அதிரடியாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் ஜி.வி., அந்த படத்திற்காக ரொம்பவே மெனக்கெடப்போகிறாராம்.
இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, அவரது நடிப்பு ஆசையும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஏற்கனவே பென்சில் என்ற படத்தில் ப்ளஸ்-2 மாணவனாக நடித்தார். அந்த படம் இன்னமும் திரைக்கு வரவில்லை. அதையடுத்து, த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்றொரு படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. அது என்னவானது என்றே தெரியவில்லை.
இந்த நிலையில், டார்லிங் என்ற படவேலைகளில் தற்போது இறங்கி விட்டார். இந்த படம் திகில் கலந்த காமெடி கதையில் உருவாகிறதாம். தெலுங்கில் அல்லு அரவிந்த் நடிப்பில் வெளியான பிரேம கதா சித்ரம் என்ற படத்தின் ரீமேக்காகும். பென்சில் படத்தில் ஜி.வி.பிரகாஷின் நடிப்பில் இம்ப்ரஸ் ஆகித்தான் அவரை இந்த படத்தில் நடிக்க வைக்கிறார்களாம். அதனால் அதிக உற்சாகத்தில் டார்லிங் படத்தில் நடிக்கும் ஜி.வி. பிரகாஷ், தெலுங்கை விட தமிழில் மெகா ஹிட்டாக இப்படத்தை கொடுத்து மார்க்கெட்டில் நின்று விட வேண்டும் என்று இந்த சிரிப்பு படத்துக்காக சீரியசாக உழைத்துக் கொண்டிருக்கிறார்.