விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவான துப்பாக்கி மெகா ஹிட்டாக அமைந்ததால், இப்போது அவர்கள் இணைந்துள்ள கத்தி படத்திற்கும் எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் எகிறிக்கொண்டிருக்கிறது. அதோடு, தீபாவளிக்கு ஐ படமும் வராது என்றாகி விட்டதால் விஜய்தான் தீபாவளி ரேசில் நம்பர்ஒன்றாக இருக்கப்போகிறார்.
மேலும், விஷாலின் பூஜை படத்திற்கும் ஏற்கனவே முக்கிய தியேட்டர்கள் கைப்பற்றப்பட்டு விட்டபோதும், விஜய் படத்துக்கு தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 450 தியேட்டர்கள் கிடைத்திருப்பதாக சொல்கிறார்கள். இன்னும் தியேட்டர்களை கைப்பற்றும் வேலைகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.
அதுமட்டுமின்றி, விஜய்யின் ஓவர்சீஸ் மார்க்கெட்டும் எகிறி நிற்பதால், மலேசியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் கத்தி இதுவரையில்லாத அளவுக்கு அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகிறதாம். முக்கியமாக அந்தந்த நாடுகளில் தமிழர்கள் அதிகமாக வாழும் ஏரியாவாக பார்த்து தியேட்டர்களை பிடித்துள்ளார்களாம். அந்த வகையில் இங்கிலாந்தில் மட்டும் 70 தியேட்டர்களில் கத்தி ரிலீசாகிறதாம். இதுவரை எந்த தமிழ் படங்களும் இங்கிலாந்தில் இவ்வளவு அதிகமான தியேட்டர்களில் வெளியானதில்லை என்பது ரெக்கார்டாம்.