சூர்யா-ஜோதிகாவின் மகளாக நடித்தவர் ஹீரோயினானார்!

சில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யா-ஜோதிகாவின் மகளாக நடித்த குழந்தையை ஞாபகம் இருக்கிறதா.? இந்தப்படத்தில் சுட்டிப் பொண்ணாக நடித்து அனைவரின் பாராட்டை பெற்றவர் ஸ்ரேயா சர்மா. இவர் இப்போது ஹீரோயினாக மாறிவிட்டார்.
தெலுங்கில், காயக்கடு என்ற படத்தில் அலி ரெஸா ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஆடியோ விழா சமீபத்தில் நடந்தது. அதில் அழகு பதுமையாக தோன்றினார் ஸ்ரேயா சர்மா. மேலும் காயக்கடு படத்தின் ஸ்டில்களும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
தமிழில் சில்லுன்னு ஒரு காதல் தவிர்த்து எந்திரன், நீ தானே என் பொன் வசந்தம் படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் தவிர்த்து தெலுங்கு, இந்தி மொழி படங்களிலும், டி.வி., சீரியல்களிலும், ஏராளமான விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
2006-ல், ஜில்லுன்னு ஒரு காதல் படத்தில் நடிக்கும் போது ஸ்ரேயா சர்மாவுக்கு வயது 9, தற்போது 17 வயதில் பருவமங்கையாய் ஹீரோயினாக மாறியிருக்கிறார் ஸ்ரேயா சர்மா. மேலும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்தபோது தேசிய விருதும் வாங்கியிருக்கிறார்.