இதுவரை கதையும், கேரக்டரும் பிடித்தால் போதும் என்று நடித்து வந்த லட்சுமி மேனன், இப்போது, ஹீரோக்களும் தனக்கு பிடித்தமானவர்களாக இருக்க வேண்டும் என, கண்டிஷன் போடத் துவங்கியுள்ளார். இதுவரை, இரண்டாம் வரிசை ஹீரோக்களுடன் நடித்து வந்த
அவருக்கு, இப்போது முன்னணியில் இருக்கும் மாஸ் ஹீரோக்களுடன் டூயட் பாட வேண்டும் என்ற ஆசை பிறந்துள்ளது. அதனால், வளர்ந்து வரும் ஹீரோக்களின் படங்களை தவிர்க்கும் அவர், முன்னணி ஹீரோக்களை இயக்கியிருக்கும் டைரக்டர்களிடம் வாய்ப்பு கேட்டு வருகிறார். முன்னணி ஹீரோக்களின் கவனத்தை தன் பக்கம் இழுக்கும் முயற்சியாக, அவர்கள், தன்னை கவர்ந்த விதங்களை பட்டியல் போட்டு, பேட்டி கொடுத்து வருகிறார், லட்சுமி மேனன்.