இளம் நடிகர்கள் மத்தியில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருவது என்ன தெரியுமா? விஜய்யின் போன் அழைப்பு பற்றிதான் ஒருவருக்கொருவர் ஆச்சர்யமாக பேசிக்கொள்கிறார்கள். அதாவது, ஒரு வாரப்பத்திரிகையினால் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சில வாரங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டார் விஜய். அதன் அடுத்த கட்டமாக அந்தப் பட்டத்தை அவருக்கு வழங்குவதற்காக மதுரையில் பிரம்மாண்ட விழா நடத்தவும் இருக்கிறது.
இந்த விழாவில் கலந்து கொள்ளும்படி விஜய் சார்பாக நடிகர் நடிகைகள் அழைக்கப்பட்டிருக்கின்றனர். விஜய்யை வைத்து தேடினேன் வந்தது, வசீகரா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் செல்வபாரதியிடம் நடிகர் நடிகைகளை மதுரைக்கு அழைத்து வரும் பொறுப்பை ஒப்படைத்திருக்கிறார் விஜய்.
செல்வபாரதி தலைமையில் விஜய்யின் பி.ஆர்.ஓ. உள்ளிட்ட சிலர் தினமும் நடிகர் நடிகைகளை சந்தித்து விஜய்யின் அழைப்பை தெரியப்படுத்தி அவர்களை மதுரைக்கு வரும்படி அழைத்து வருகின்றனர்.
யார் யாரெல்லாம் வருகையை உறுதி செய்துள்ளனர் என்று கேட்டுத் தெரிந்து கொள்கிறாராம் விஜய். வருவதற்கு யார் யார் எல்லாம் தயக்கம் காட்டுகிறார்கள் என்பதையம் கேட்டுத் தெரிந்து கொண்டு, தன் பி.ஆர்.ஓ.வின் செல்போனில் இருந்தே அவர்களுக்கு போன் போட்டு பேசுகிறாராம் விஜய். மதுரைக்கு அவசியம் வரணும் ப்ரோ..! என்று அன்புடன் அழைப்பு விடுக்கிறாராம். விஜய்யின் போன் அழைப்பைக் கேட்டு வளரும் நடிகர்கர் புல்லரித்துப்போய் இருக்கிறார்கள்.