ரவா கேசரி செய்யுங்கள்.

பண்டிகை காலங்களில் பல இனிப்பு வகைகளை செய்வது வழக்கம்.  இதிலும் விசேட காரியங்கள் நடந்தாலும் கேசரி செய்வோர் அதிகம். இவற்றில் ரவா கேசரி செய்யும் விதம் பற்றி  தெரியாதோர் இங்கு  கற்றுக் கொள்ளுங்கள்.

அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு கிஸ்மிஸ், முந்திரியை நன்கு வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.மீண்டும் 2 டேபிள்ஸ்பூன் நெய் விட்டு ரவை வாசனை போகும் வரை வறுக்கவும்.
இரண்டரை கப் தண்னீரைச் சேர்த்து அடுப்பை நிதானமாக வைத்து நன்கு வேகவைக்கவும்.ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை, கேசரி கலரைச் சேர்த்துக் கிளறவும்.சர்க்கரையால் கலவை மீண்டும் தளரும்.ஒட்டாமல் சேர்ந்து வரும்வரை இடையில் சிறிது சிறிதாக நெய் விட்டுக் கொண்டே கிளறவும்.
இறக்கும் முன் மிச்சமுள்ள நெய், ஏலப்பொடி தூவி இறக்கவும்.பொரித்து வைத்திருக்கும் கிஸ்மிஸ், முந்திரியில் பாதியைக் கலந்து கொள்ளவும்.

இறக்கிய கேசரியை ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி, மேலே மீதி கிஸ்மிஸ் முந்திரி தூவி, வில்லைகள் போடலாம். அல்லது விருந்துகளின் இறுதியில் டேசட் உணவு மாதிரி தருவதாக இருந்தால் இப்படிச் செய்யலாம்; ஒரு குழிக் கரண்டியில் நெய் தடவி, ஒவ்வொரு முறையும் ஒரு முந்திரி, சில கிஸ்மிஸ்களை அடியில் போட்டு, அந்தக் கரண்டியால் சூடான கேசரியை எடுத்து கப்பில் போட்டால் ஒரே அளவாகவும் மேல்ப்பகுதி அலங்கரித்தும் இருக்கும். 4, 5 தடவைக்கு ஒருமுறை தேவைப்பட்டால் கரண்டியில் சிறிது நெய் தடவினால் ஒட்டாமல் விழும்.

கேசரிக்கு மிகக் குறைவாக இனிப்பு வேண்டுபவர்கள் பலர் ஒன்றரை கப் சர்க்கரை சேர்க்கிறார்கள். அதிகம் தேவை என்று சிலர் 2 கப். நான் எப்பொழுதுமே நடுவில்  1 3/4 கப். கேசரியில் சர்க்கரை அதிகமாகிவிட்டால் பாயசம் மாதிரி தளர்ந்தும், ஆறியதும் பாகு இறுகி நொசநொச என்றும் ஆகிவிடும். தவறுதலாக சர்க்கரை அதிகமானால்சிறிது கோதுமை மாவை நன்கு வறுத்துச் சேர்க்கவும்.