பெரிய தக்காளி ஒன்றையும் சிறிய தக்காளி ஒன்றையும் எடுத்துக் கொள்ளுங்கள். சின்ன தக்காளி பழத்தில் ஒரு பகுதி பெரிதாகவும் ஒரு பகுதி சிறிதாக இருக்குமாறும் வெட்டிக் கொள்ளவும்.
சிறிய தக்காளியில் பெரிதாக வெட்டிய பகுதியையும் பெரிய தக்காளி பழத்தையும் ஒரு சிறிய குச்சியின் மூலம் இணைக்கவும். பின்பு மிகுதியாக இருக்கும் சிறிய தக்காளியில் இரண்டு இலை வடிவங்களை வெட்டி கைகளை போல் பொருத்தவும்.
முகத்தில் கிராம்பு இரண்டை கண்களை போலவும் மூக்குக்கு மிளகு ஒன்றையும் வாய்க்கு சிவப்பு நிறத்தில் சிறிய மிளகாய் துண்டையும் வைக்கவும்.தக்காளி பொம்மை தயார்.
இதை போல் ஒரு பெரிய தக்காளி பழத்தின் மேல் பகுதியின் நடுவில் சிறிய கைப்பிடி போல வைத்து மிகுதியை வெட்டி எடுக்கவும்.கீழ் பகுதியில்உள்ள தக்காளியின் விதைகளை எடுத்தால் ஒரு கூடை தயாராகி விட்டது. அதின் நடுவில் காரட், பீற்றுட், முள்ளங்கி போன்ற பல நிறங்களில் உள்ள மரக்கறிகளை கொஞ்சம் வதக்கி கூடையில் வைத்தால் அழகாக இருக்கும்.
வீட்டில் விருந்து நடைபெறும் போது இதை சாப்பாட்டு மேசையின் நடுவில் வைத்தால் அழகாகவும் வித்தியாசமாகவும் இருக்கும்.