ஒரு பாத்திரத்தில் இரண்டு கோப்பை அளவு தேங்காய் பாலை எடுத்து அதில் சிறிது புளி கரைசல், மஞ்சள் தூள் தேவையான அளவு மிளகாய் தூள், தனியாதூள், உப்பு,ஒரு கைப்பிடி அளவு வெந்தயம் என்பவற்றை ஒன்றாக கரைத்து வைக்கவும்.
பின்பு ஒரு பாத்திரத்தில் சிறிது எண்ணையை ஊற்றி
எண்ணை காய்ந்ததும் அதில் தாளிப்பதற்கான கறிவேப்பில்லை, கடுகு, வெங்காயம் என்பவற்றை இட்டு பொன்னிறமாக வந்ததும் அதில் முன்பே செய்து வைத்த கரைசலை ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும்.
சிறிது வற்றி வரும்போது, டின் மீனிலுள்ள தண்ணீரையும் அதில் ஊற்றி மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் கொதிக்க விட்டு டின் மீனையும் அதில் இட்டு முதல் தேங்காய் பாலை மட்டும் ஊற்றி ஒரு கொதியில்இறக்கவும். சுவையான டின் மீன் கறி தயார்.