நத்தார் முகமுடியை செய்து பாருங்கள்.

முட்டையின் ஓட்டை நன்றாக கழுவி விட்டு அதற்கு வெள்ளை, சிவப்பு இரண்டு நிறங்களையும் கலந்து வரும் இளச் சிவப்பு நிறத்தை பூசி காய வைக்கவும். காய்ந்ததும் நத்தார் தொப்பியை போல் சிவப்பு நிற காகிதத்தை கூர்மையாக செய்து ஓட்டின் மேல் பகுதியில் ஒட்டவும். பின்பு பஞ்சில் மீசை,தாடி, புருவம் வைத்து விட்டு மீசையின் கீழ் சிவப்பு நிறத்தில் சிறிதாக வாய் வரையவும். பின் இரண்டு சிறிய கருப்பு பொட்டுகளை கண்களை போல் ஒட்டவும். அழகிய நத்தார் முகம் தயாராகி விட்டது.