ஆர்.கே இனி மக்கள் தளபதியாம்..

தமிழ் நாட்டைச் சேர்ந்த என்ஆர் ஐ தொழிலதிபர் ஆர்.கே. வெளிநாட்டில் தயாரான சில படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தவர், எல்லாம் அவன் செயல் என்ற படத்தை தயாரித்து அதில் ஹீரோவாக நடித்தார். சிந்தாமணி கொலை கேஸ் என்ற மலையாளப்படத்தின் ரீமேக் அது. அந்த படம் ஓரளவுக்கு ஓடியதும், ஆர்கே நிரந்தர ஹீரோவானர். இங்கேயே கிளப்புகள், ஓட்டல்கள் திறந்தார். சினிமாவிலும் நடித்தார்.

ஆனால் அதன் பிறகு அவர் நடித்த மருதமலை, புலிவேஷம் படங்கள் ஓடவில்லை. பாலாவின் அவன் இவன், விஜய்யின் வேலாயுதம் படங்களில் கேரக்டர் ரோலில் நடித்தார். அதுவும் சரியாக போகவில்லை.



அதனால் மீண்டும் எல்லாம் அவன் செயல் படத்தை இயக்கிய மலையாள இயக்குனர் ஷாஜி கைலாசை அழைத்து வந்து என் வழி தனி வழி என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடிக்கிறார். இதில் அவர் கரடுமுரமான என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாக்ஷி தீட்சித், பூனம் கவுர் நடிக்கிறார்கள்.

இந்த படத்தின் மூலம் ஆர்கே மக்கள் தளபதியாகிறார். விஜய் இளைய தளபதி, பரத் சின்ன தளபதி, விஷால் புரட்சி தளபதி, அந்த வரிசையில் ஆர்கே மக்கள் தளபதியாகி இருக்கிறார். ரசிகர்கள் அவருக்கு வற்புறுத்தி கொடுத்த பட்டமாம் இது. அவர்களது அன்புக்கு கட்டுப்பட்டு இந்தப் பட்டத்தை பெற்றுக் கொண்ட ஆர்.கே அதனை என் வழி தனி வழி படத்தின் டைட்டிலிலும், விளம்பரத்திலும் பயன்படுத்தப் போகிறார். அவர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் இது கூறப்பட்டுள்ளது.