தெலுங்குத் திரையுலகைப் பொறுத்தவரையில் முன்னணி நடிகைகள் அனைவருமே அவரவர் படங்களின் இசை வெளியீட்டுக்கோ, பத்திரிகையாளர் சந்திப்புக்கோ கண்டிப்பாக வந்து விடுவார்கள். அங்கு படத்தின் நாயகியர் வரும் போதுதான் புகைப்படக் கலைஞர்களும் புகைப்படங்களாக எடுத்துத் தள்ளுவார்கள். நடிகர்களுக்குள் எப்படிப்பட்ட போட்டி இருந்தாலும், நடிகைகள் அனைத்து ஹீரோக்களின் படங்களின் விழாக்களுக்கும் தவறாமல் வருவார்கள்.
அப்படியிருக்க சமீபத்தில் நடைபெற்ற 'அஞ்சான்' படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சமந்தா வரவில்லை. அவர் தெலுங்குப் படம் ஒன்றின் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றிருந்தார் என்று தகவல்கள் வெளியாகின.
அதோடு திரும்பி வந்த பின் அவருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால்தான் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை என்று அவரே சொல்லியிருந்தார். ஆனால், மறுநாளே ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும், அதற்கடுத்து ஹைதராபாத்தில் 'ரபாஷா' படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
இதனால் சமந்தா மீது சூர்யா கோபமாக உள்ளார் என்று தெரிகிறது. 'அஞ்சான்' படத்தில் சமந்தா நடிக்க ஆரம்பித்த பின்தான் அவரை விஜய் படத்திற்கும், விக்ரம் படத்திற்கும் ஒப்பந்தம் செய்தார்கள். மேலும் 'அஞ்சான்' படத்தின் மூலம் தான் தமிழில் ரீ-என்ட்ரி ஆக வேண்டும் என்று சமந்தா எதிர்பார்ப்பதாகத் தகவல்கள் வெளியாகின. இந்த சூழ்நிலையில் சமந்தா 'அஞ்சான்' படத்தில் அவருக்கு முக்கியத்துவம் இல்லாத காரணத்தாலேயே ஆடியோ விழாவைப் புறக்கணித்ததாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது.