விக்ரமின் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இதுவரை இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமாக உருவாக்கி வரும் படம் 'ஐ'. ஆஸ்கர் பிலிம்ஸ் மிகுந்த பொருட் செலவில் தயாரித்து வரும் இந்தப் படம் ஏறக்குறைய இரண்டு வருடங்களாக படமாக்கப்பட்டு வருகிறது.
இந்தப் படத்திற்காக விக்ரம் தனது உடலை மிகவும் ஒல்லியாக மாற்றியும், பின்னர் திடகாத்திரமாகவும் மாற்றி நடித்திருக்கிறார். 'மதராசப் பட்டிணம்' படத்தின் ஆங்கிலேய நாயகி எமி ஜாக்சன் விக்ரம் ஜோடியாக நடித்திருக்கிறார்.
இந்தப் படத்தைப் பற்றி பல்வேறு விதமான வதந்திகள், செய்திகள் வந்தாலும், படப்பிடிப்பு முழுவதுமாக நடந்து முடிந்து தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. படத்தில் எண்ணற்ற கிராபிக்ஸ் காட்சிகள் இருப்பதால்தான் வெளியீடு தாமதமடைகிறதாம். அவையனைத்தும் முடிந்த பின் படத்தை தீபாவளி அன்று வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம். இது பற்றிய செய்தி சம்பந்தப்பட்ட திரையரங்க உரிமையாளர்களுக்கு போய்ச் சேர்ந்துவிட்டதாம். அவர்கள் அனைவரும் இந்த படத்தை மிகவும் எதிர்பார்ப்பதால் தற்போதே தியேட்டர் புக்கிங் செய்து வருதும் நடந்து வருவதாகத் தெரிகிறது.
ஷங்கர் கடைசியாக இயக்கிய 'நண்பன்' சுமாரான படமாகப் போய்விட்டதாலும், விக்ரமின் முந்தைய படங்கள் பெயர் சொல்லும் வெற்றியைப் பெறாததாலும், இருவருமே 'ஐ' படத்தை மிகப் பெரிதாக எதிர்பார்க்கிறார்கள். விக்ரம் இந்தப் படத்தின் வெற்றியின் மூலம் உச்சத்தை அடையலாம் என்றும் எதிர்பார்க்கிறாரராம். எப்படியும் படம் பார்க்கும் ரசிகர்களை 'ஐ....' என ஆச்சரியப்பட வைக்க உழைத்து வருகிறார்களாம்.