'நான் கடவுள்' படத்தில் கண் பார்வை இல்லாத பெண்ணாக நடித்து அழுத்தமான முத்திரை பதித்தவர் பூஜா. தற்போது, அவருக்கு அதிகமாக படங்கள் இல்லை என்றாலும், அவரைப்பற்றி வெளியாகும் காதல் செய்திகள் பரபரப்பு கூட்டி வருகின்றன. அவர் கூறுகையில், 'அனைவரிடமும் அன்பாக பழகுவேன்.
என்னை அவர்களுக்கு பிடித்து விட்டால், அதிக உரிமை எடுத்துக் கொண்டு பழகுவேன்; முத்தம் கொடுப்பேன்; கட்டிப்பிடிப்பேன். ஆனால், இது என்னுடைய அன்பின் வெளிப்பாடு தான். இதை பார்ப்பவர்கள் உடனே அவர்களுடன் என்னை இணைத்து காதல் செய்தி பரப்புகின்றனர்' என, கடுப்படிக்கிறார்.