குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் ஜெனிபர். கில்லி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்ததன் மூலம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனிக்கப்பட்டவர். குழந்தை நட்சத்திரமான ஜெனிபர், பிறகு குமரி நட்சத்திரமாகி சில படங்களில் நடித்தார்.
ஆனாலும் பிஸியான நடிகையாக அவரால் வர முடியவில்லை. எனவே சின்னத்திரைக்குப் போய் அங்கே பல தொடர்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்ல, விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஜோடி நடன நிகழ்ச்சியிலும் பங்கு பெற்று நடனமாடி வந்தார்.
இந்நிலையில், கல்கண்டு என்ற படத்தில் காமெடி வேடத்தில் நடித்து வருகிறார் ஜெனிபர். நாகேஷின் பேரனும், ஆனந்தபாபுவின் மகனுமான கஜேஷ் நடிக்கும் கல்கண்டு படத்தில் ஜெனிபருக்கு முழுநீள நகைச்சுவை வேடத்தைக் கொடுத்திருக்கிறார் இயக்குநர் நந்தகுமார். இவர் விஜயகாந்தை வைத்து தென்னவன், பிரசாந்தை வைத்து ஜாம்பவான் ஆகிய படங்களை இயக்கியவர். கல்கண்டு படத்தில் மற்றொரு சிறப்பு...கல்கண்டு படத்தின் கதாநாயகி டிம்பிள்சோப்டே! இவர் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்.