திராட்சையின் குணநலன்கள்.

திராட்சை பழமானது உடல் எடையைக் குறைக்கவும், கூட்டவும் உதவுகிறது. இவற்றில் பச்சைத் திராட்சை,கறுப்புத் திராட்சை,  பன்னீர்த் திராட்சை, காஷ்மீர்த் திராட்சை ஆங்கூர் திராட்சை, காபூல் திராட்சை, விதையில்லா திராட்சை என பல வகையுண்டு.

உலர்ந்த திராட்சையில் சாதாரண திராட்சை விட 5 மடங்கு அதிக சர்க்கரைச் சத்து உள்ளது. தொடர்ந்து உலர்ந்த திராட்சை சாப்பிட்டு வந்தால் உடல் எடை அதிகரிக்கும்.
கருப்பு திராட்சை பழச்சாறு 200 மில்லியை தினமும் 2 வேளை குடித்து வந்தால் அதிகப்படியான கொழுப்புச் சத்து குறைவதுடன் உடல் எடையும் குறையும். எனவே உங்களது உடல் எடை கட்டுப்பாட்டுக்குள் வைத்து நீங்கள் எதிர்பார்க்கும் உடல் அமைப்பை பெறலாம்.

மலச்சிக்கல்,இரத்த சோகை,பித்தத்தை நீக்குதல்,சிறுநீர கோளாறுகளை போக்கும் சக்தி திராட்சைக்கு உண்டு.தனால்இரத்தம் தூய்மையாகுவதுடன்  மூலை, கல்லீரல், இதய நரம்புகள் வலுப்பெறும்.  இரத்தம் கட்டுவதை இல்லாமல் செய்து இரத்த ஓட்டத்தை சீராக்கும் தன்மை திராட்சைக்கு உண்டு.