பொட்டுக்கடலை உருண்டை

தேவையான பொருட்கள்

வெல்லம் அல்லது சக்கரை 200 கிராம்.
உடைத்த பொட்டுக்கடலை -  200 கிராம்
நெய் – 1 தேக்கரண்டி
ஏலக்காய் பொடி – ½ தேக்கரண்டி  
தண்ணீர் – 100 மில்லி

செய்முறை
பொட்டுக்கடலையை நெய் விட்டு லேசாக வறுத்து கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் 100 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி அதில்  வெல்லம் அல்லது சக்கரையை சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் அல்லது சக்கரை கரைந்து பாகு பதம் வந்ததும் அதில் ஏலக்காய் பொடி, வறுத்து வைத்துள்ள பொட்டுக்கடலை இரண்டையும் இட்டு கலக்கவும். கைப் பொறுக்கும் அளவு சூடாக இருக்கும் போதே இக்கலவையை சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும். (பாகில் போடப்பட்ட பொட்டுக்கடலையில் சூடு ஆறி விட்டால் உருண்டை பிடிக்க முடியாது)