பொதுவாக வியர்வை நாற்றம் என்பது எல்லோருக்கும் இருக்கக்கூடிய பொதுவான ஒன்றாகும்.
ஆனால் சிலருக்கு வியர்வை நாற்றம் என்பது பக்கத்தில் இருப்பவரை கூட அருகில் செல்ல முடியாமல் செய்துவிடும்.
வியர்வை நாற்றத்தை போக்குவதற்கு பெர்பியூம்களை பயன்படுத்தினாலும் சில சமயங்களில் அதனால் பக்கவிளைவுகளும் வரலாம்.
இயற்கையாகவும் வியர்வை நாற்றத்தை போக்கலாம்,
வியர்வை நாற்றத்தை போக்கும் அந்த கனி ” எலுமிச்சை “ தான், எத்தனை நாட்களில் வியர்வை நாற்றம் நீங்கும் என்று கேட்கிறீர்களா சரியாக மூன்று மணி நேரம் தான்.
எலுமிச்சம் பழத்தை உடல் எங்கும் நன்றாக தேய்த்து 1 மணி நேரம் கழித்து குளித்து பாருங்கள்.
தினமும் அரை
எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்கலாம் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அரை எலுமிச்சை பயன்படுத்தலாம்.
முடிந்தவரை அசைவ உணவு வகைகளையும், மைதாவில் தயாராகும் உணவுப்பண்டங்களையும் குறைக்கப்பாருங்கள், மேலும் மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொண்டாலே வியர்வை நாற்றம் பெருமளவு குறையும்.