ஜிஞ்ஞர்  பிஸ்கட் வீட்டிலேயே செய்யலாமே....

இஞ்சி சாறு - 1/2 கப்,
மைதா - 2 கப்,
சர்க்கரை - 1/2 கப்,
சோடா - 1/2 டீஸ்பூன்,
வெண்ணெய் - 100 கிராம்,
பட்டை பொடி - 1/2 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

1 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, வெண்ணெயைச் சேர்த்து சுட வைக்கவும். வெண்ணெய் உருகி தண்ணீரில் கரைந்தவுடன் மைதா, சர்க்கரை, இஞ்சி சாறு, பட்டை பொடி, சோடா சேர்த்து கலக்கி கிளறவும். பின் கீழே இறக்கி வைத்து, இந்த மாவைப் பிசைந்து 1 இஞ்ச் உயரத்துக்கு சப்பாத்தி குழவியால் திரட்டவும்.
அதை, விருப்பமான வடிவத்தில் வெட்டி, மேலே குச்சியால் குத்தி, பேக்கிங் டிரேயில் வைத்து பேக் செய்யவும். 180 டிகிரி செல்சியஸ் உஷ்ணத்தில் பொன்னிறமாகும் வரை பேக் செய்து காற்றுப் புகாத டப்பாவில் வைத்துப் பரிமாறவும்.

குறிப்பு :- விரும்பினால் அதின் மேலே படத்தில் கட்டப்பட்டுள்ளது போல அலங்கரித்து பரிமாறினால் இன்னும் வித்தியாசமாக இருக்கும்.