கொய்யா பர்ஃபி தேவையானவை: நடுத்தர சைஸ் கொய்யாப்பழம் & 5, சர்க்கரை & மூன்றரை கப், வெண்ணெய் & கால் கப், சிட்ரிக் ஆசிட் & 1 கிராம், உப்பு & அரை டீஸ்பூன், ஏலக்காய் (பொடித்தது) & 5. செய்முறை: பழத்தை நறுக்கி ஒரு லிட்டர் தண்ணீர் சேர்த்து அடுப்பிலேற்றி வேகவிடவும். அதை மசித்து கொசுவலைத் துணியில் ஊற்றி விதைகள், தோல் போன்றவற்றை அகற்றி விடவும். வடிகட்டிய சாறை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதோடு சர்க்கரை, வெண்ணெய், சிட்ரிக் ஆசிட் மற்றும் உப்பையும் சேர்த்து அடுப்பிலேற்றி கிளறவும். கெட்டிப்படத் துவங்கியதும் ஏலப் பொடியைத் தூவி கிளறவும்.
நன்கு கெட்டிப்பட்டதும் நெய் பூசிய ஒரு தட்டில் கொட்டி, துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். இப்பொழுது சூடான கொய்யா பர்ஃபி தயார். கொய்யா பர்ஃபி: மிகவும் கனிந்துவிட்ட கொய்யா பழங்களை வீணாக்காமல், இந்த முறையில் பர்ஃபி செய்யலாம். சூப்பர் டேஸ்ட்!