தேவையான பொருட்கள்:
நெய் - தேவையான அளவு
முந்திரி - 1 கப்
சோள மாவு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1/2 கப்
தண்ணீர் - 1/4 கப்
செய்முறை:
முதலில் பிளெண்டரில் முந்திரி மற்றும் சோள மாவு சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்னர் ஒரு வாணலியில் சர்க்கரை மற்றும் தண்ணீர் ஊற்றி, பாகு ஆகும் வரை நன்கு கொதிக்க விட வேண்டும். பின்பு அதில் அரைத்த முந்திரி பொடியைப் போட்டு, தீயை குறைவில் வைத்து 3-4 நிமிடம் தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
அவ்வாறு கிளறும் போது கலவையானது பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் போது, அடுப்பில் இருந்து இறக்கி, நன்கு மென்மையாகவும் வரை கரண்டி கொண்டு பிசைய வேண்டும். பின் ஒரு தட்டில் நெய்யை தடவி, அதில் அந்த கலவையை ஊற்றி பரப்பி, வேண்டிய வடிவில் வெட்டினால், சூப்பராக முந்திரி பர்ஃபி ரெடி.விரும்பினால் வெட்டிய துண்டுகளின் நடுவில் முந்திரிகளை வைத்து அலங்கரிக்கலாம். இதனை காற்றுப்புகாத டப்பாவில் போட்டு ஒரு வாரம் வரை வைத்து சாப்பிடலாம்.