த்ரிஷா தொடங்கி வைத்த பேஸ்புக் பக்கம்!

தெலுங்கு நடிகரான பாலகிருஷ்ணா நம்ம சூர்யா மாதிரி. சூர்யாவைப்போலவே இவரும் இதுவரை ஃபேஸ்புக் ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளங்களுக்கு வராமலே இருந்தார். இப்போது வந்துவிட்டார். நந்தமூரி சிகரம் என்கிற பேஸ்புக் பக்கம் பாலகிருஷ்ணாவுக்காக துவங்கப்பட்டுள்ளது. இந்த பக்கத்தில் பாலகிருஷ்ணாவின் லேட்டஸ்ட் விஷயங்களை ரசிகர்களுக்கு உடனுக்குடன் அப்டேட் செய்ய இருக்கின்றனர். பாலகிருஷ்ணாவின் இந்த பேஸ்புக் பக்கத்தை சமீபத்தில் நடிகை த்ரிஷா துவங்கி வைத்தார்.

பால்கிருஷ்ணாவின் லயன் படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வருகிறார். லயன் படத்தில் படப்பிடிப்பில்தான் ஃபேஸ்புக் பக்கத்தை த்ரிஷா தொடங்கி வைத்த நிகழ்ச்சி நடைபெற்றது. ஃபேஸ்புக் மட்டுமல்ல, பாலகிருஷ்ணாவின் இத்தனை ஆண்டுகால திரையுலக சாதனைகளை எல்லாம் தொகுத்து ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகம் ஒன்றையும் நந்தமூரி சிகரம் என்ற பெயரில் வெளியிட உள்ளனர்.


பாலகிருஷ்ணாவின் உதவும் கரங்கள் அமைப்பை நடத்திவரும் அனந்தபுரம் ஜெகன் என்பவர் இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறார். பாலகிருஷ்ணாவின் சாதனைகள் மற்றும் அவருடனான அனுபவங்கள் பற்றி பிரபலங்களும் மக்களும் தங்கள் கருத்தை இதில் பதிவு செய்ய இருக்கிறார்கள். இந்த புத்தகத்திற்கான வேலைகள் ஏற்கனவே துவங்கிவிட்டன. பாலகிருஷ்ணாவின் மனைவி வசுந்தரா, நந்தமூரி சிகரம் புத்தகத்தின் முதல் பக்கத்தையும் எழுதியுள்ளார்.