இலங்கையில் உள்ள தமிழர்கள் தீவிரமாக தமிழ்ப்படங்களை ரசிப்பவர்கள். நம் ஹீரோக்களை கொண்டாடுபவர்களும் அவர்கள்தான். அதே நேரம் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் கடந்த காலங்களில் செல்வாக்கு பெற்றவராக இருந்தவர் எம்.ஜி.ஆர். மட்டுமே. எம்.ஜி.அர். நடிகராக இருந்த காலகட்டத்தில் இலங்கையில் அவருக்கு 40 அடி கட் அவுட் வைக்கப்பட்டது.
சினிமா நடிகர்களுக்கு கட் அவுட் வைக்கப்பட்ட விஷயத்தில் எம்.ஜி.ஆருக்கு 40 அடி உயரத்தில் கட்அவுட் வைக்கப்பட்டதே இலங்கையைப்பொருத்தவரை சாதனையாக இருந்தது. அந்த சாதனை அஜித்தினால் முறியடிக்கப்பட்டது. அதாவது யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு திரையரங்கில் அஜித்தின் ஆரம்பம் படம் திரையிடப்பட்டபோது 58 அடி உயரத்தில் கட் அவுட் வைத்தனர்.
தற்போது அதே யாழ்ப்பாணத்தில் அஜித்திற்கு 60 அடியில் பிரமாண்டமான கட் அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்த கட் அவுட் வைக்கப்பட்டுள்ள இடம் மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடம். அங்கு பேனர்கள் வைப்பதற்கே போலீஸ் பெரும்பாலும் அனுமதிப்பதில்லையாம். இப்படி ஒரு சிக்கலான இடத்தில் இலங்கையில் உள்ள அஜித் ரசிகர்கள் 60 அடி கட் அவுட்டை எப்படி வைத்தனர்? இதில் ராஜபக்சேவின் அரசியல் தந்திரம் ஒளிந்துள்ளதாக அரசியல் கதை ஒன்றையும் சொல்கிறார்கள் இலங்கையில் உள்ள தமிழர்கள்.
இலங்கையில் அஜித்துக்கு வெறித்தனமான ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளதாம். தற்பொழுது இலங்கையில் தேர்தல் நடைபெற உள்ளதால் அஜித் ரசிகர்களின் ஓட்டுகளை பெற வேண்டும் என்பதற்காகவே அஜித்துக்கு கட் அவுட் வைக்க ராஜபக்சே அரசு அனுமதி உள்ளதாம்.