'கத்தி' படத்தைப் பற்றி பல சர்ச்சைகள், விவாதங்கள் எழுந்து வரும் நிலையில் படம் வெளியாகி பத்து நாட்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் படத்தின் வசூல் நிலவரம் ஸ்டடியாகவே இருக்கிறது என்கிறார்கள். நேற்றுடன் முடிந்த வார இறுதி வசூல் 90 கோடி ரூபாய் அளவைத் தொட்டிருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
இந்த வார முடிவிற்குள் 100 கோடி ரூபாய் வசூலைத் தாண்டினால் ஆச்சரியமில்லை என்கிறார்கள். இதனிடையே 'கத்தி' படம் தெலுங்கில் ரீமேக் ஆகுமா என்பது சந்தேகமாகிவிட்டது. இப்படத்தை டப்பிங் படமாகவே விரைவில் வெளியிட உள்ளார்கள்.
அதேசமயம் படத்தின் மற்ற மொழி ரீமேக் உரிமையை யாருக்கும் விற்கவில்லையாம். தெலுங்கிலும், ஹிந்தியிலும் படத்தின் ரீமேக் உரிமையை விலைக்கு வாங்க பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்களாம். ஹிந்தியில் அக்ஷய் குமார் படத்தை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 'துப்பாக்கி' படத்தை சில மாதங்களுக்கு முன் 'ஹாலிடே' என்ற பெயரில் ஹிந்தி ரீமேக்காக முருகதாஸ் இயக்க, அக்ஷய் குமார், சோனாக்ஷி சின்ஹா நடித்து வெளியாகி நல்ல வெற்றியைப் பெற்றது.
அதனால், தமிழில் தற்போது நல்ல வெற்றியைப் பெற்றுள்ள 'கத்தி' படத்தையும் ஹிந்தியில் தானே நடித்து ரீமேக் செய்தால் மீண்டும் ஒரு வெற்றியைப் பெறலாம் என அக்ஷய் குமார் நினைக்கிறாராம்.