த்ரிஷாவுக்கு புகை பகையாம்!

பிராணிகளின் தோழியான த்ரிஷா, யாராவது தெருநாய்களை கல்லைக் கொண்டு எரிவது, கொடுமைப்படுத்துவதைப் பார்த்தால் பொங்கி எழுந்து விடுவார். அதோடு, தான் அமர்ந்திருக்கும் பகுதியில் யாராவது புகை பிடிப்பதைப் பார்த்தாலும் கொதித்து எழுந்து விடுவாராம்.

உடனே அந்த நபரை அழைத்து, நாலு பேர் இருக்கிற இடத்துல இப்படி ரயில் வண்டி மாதிரி புகையை தள்ளுறீங்களே நியாயமா? இதனால் உங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை எங்களுக்குத்தான் பிரச்சினை. நீங்க தம் அடிக்கிறதுக்கு நாங்க நோயாளி ஆகனுமா? என்று லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுவாராம்.


இதனால் த்ரிஷாவின் இந்த டென்சனைப்பற்றி தெரிந்தவர்கள் அவரிடம் புகை என்ற வார்த்தையை உச்சரிக்கக்கூட அஞ்சுவார்களாம். அப்படிப்பட்ட த்ரிஷாவை, என்னை அறிந்தால் படத்தில் ஒரு காட்சியில் நடிக்க அழைத்தபோது, படப்பிடிப்பு நடந்த செட் முழுக்க புகை மண்டலமாக மாற்றியிருந்தாராம் கெளதம்மேனன்.


ஆனால் இந்த விசயம் தெரியாமல் கேரவனுக்குள் அமர்ந்து மேக்கப்போட்டு கொண்டு செட்டுக்குள் வந்த த்ரிஷா, அஜீத், கெளதம்மேனன் உள்பட யூனிட்டே அந்த புகை மண்டலத்திற்குள் இருப்பதை பார்த்தும், என்னால் இந்த புகை மண்டலத்திற்குள் வரவே முடியாது. ஏனென்றால் எனக்கு அது அலர்ஜியாகிவிடும்.மீறி நான் வந்தால் இன்னும் ஒரு வாரத்திற்கு படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத அளவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு விடும் என்று ஓட்டம் பிடித்து விட்டாராம். அதனால், அந்த காட்சியை புகையில்லாமல் படமாக்கியிருக்கிறார் கெளதம்மேன்ன.


ஆனால், அஜீத்தோ, எந்த தயக்கமும் இல்லாமல், கேரவன் என ஒன்று இருப்பதையே மறந்து, செட்டில் புகையை உருவாக்க ஊழியர்கள் ஒர்க் பண்ணிக் கொண்டிருக்கும்போதே அதே ஸ்பாட்டில் சேர் போட்டு அமர்ந்திருந்தாராம். த்ரிஷா போன்ற சில நடிகைகள் செய்யும் இந்த மாதிரி சேட்டைகளைப் பார்தது, என்ன இருந்தாலும் தல தலதான் என்று அஜீத்தை பெருமையாக பேசுகிறார்கள் கோடம்பாக்கவாசிகள்.