ரஜினியின் லிங்கா டீசர் இன்று வெளியாகிறது

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் லிங்கா படத்தின் டீசர் அக்டோபர் 31ம் தேதி வெளியாவதாக கடந்த 2 நாட்களாக வதந்திகள் பரவி வந்தது. இதனை நம்பி ரஜினி ரசிகர்கள் பலரும் லிங்கா டீசர் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்கு ஆவலாக காத்திருந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்த்தபடி டீசர் வெளியாகாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில், லிங்கா படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இறங்கி இருக்கும் படக்குழுவினர், இன்று (நவம்பர் 1) மாலை படத்தின் டீசரை வெளியிட உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனால் தலைவர் வருகிறார் என்ற எதிர்பார்ப்புடனும் உற்சாகத்துடனும் ரஜினி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.