சமீபகாலமாக தமிழ் சினிமாவில் அதிகரித்து வரும் ஒரு பிரச்னை கதை திருட்டு. பெரிய நடிகர்கள் தொடங்கி புதுமுகம் நடிகர்கள் வரை இந்த பிரச்னை தொடர்கிறது. சமீபத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள கத்தி படத்தின் கதை என்னுடையது என்று ஒருவர் புகார் கொடுத்தார். இதுதொடர்பான வழக்கு நடைபெற்று வந்தாலும் படம் வெளியாகி இப்போது ரூ.100 கோடி வசூலித்து விட்டது.
இந்நிலையில் அதிகரித்து வரும் கதை திருட்டு பிரச்னையை தடுக்க, தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் ஒரு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இயக்குநர் சங்க தலைவர் விக்ரமன் தலைமையில் நடந்து இக்கூட்டத்தில், படங்களுக்கு தலைப்பு பதிவு செய்வதை போன்று, ஒரு படத்தின் கதையையும் இயக்குநர் சங்கத்தில் பதிவு செய்து கொள்ளலாம், இதற்கு கட்டணம் எதுவும் கிடையாது. இதன்மூலம் கதை திருட்டை தடுக்க முடியும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.