அட்டகத்தி ரஞ்சித் இயக்கிய படம் மெட்ராஸ். இந்த படத்தில் கார்த்திக்-கேத்ரின் தெரசா இருவரும் ஜோடி என்றபோதும், அதே படத்தில் இன்னொரு ஜோடியாக நடித்த கலையரசன்-ரித்விகா ஜோடிதான் பலரின் கவனத்தை ஈர்த்தவர்கள். கதைப்படி ஸ்லம் ஏரியாவில் வாழும் இவர்கள் இருவரும் அந்த கதாபாத்திரங்களாகவே மாறி நடித்திருந்தனர்.
அதோடு, கணவன்-மனைவியாக வாழ்ந்த அவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட்டாகியிருந்தது. அதோடு கலையரசன் நடித்திருந்த அன்பு என்ற கதாபாத்திரம் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால், அவரது நடிப்பை பற்றி பத்திரிகைகளும் பெரிய அளவில் எழுதியிருந்தன.
விளைவு, தற்போது மைலாஞ்சி என்ற படத்தில் ஹீரோவாக ப்ரமோஷன் ஆகியிருக்கிறார் கலையரசன். ஆனால், அவருக்கு ஜோடியாக நடித்த ரித்விகாவுக்கு எதிர்பார்த்தபடி ஹீரோயின் வேடங்கள் கிடைக்கவில்லை. அதோடு அவருக்கு பொருத்தமான கேரக்டர்களோடு சிலர் அவரை தேடிச்சென்றால், வீட்டில் ஒரு கைக்குழுந்தையுடன் காட்சி கொடுக்கிறாராம் ரித்விகா. விளைவு, ரித்விகாவுக்கு திருமணமாகி குழந்தையே இருக்கிறது என்று கோலிவுட்டில் செய்தி பரவிக்கிடக்கிறது.
ஆனால், இந்த செய்தி ரித்விகாவின் காதுக்கு சென்றபோது ஆடிப்போய் விட்டாராம். காரணம், அவருக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையாம். அதனால் நான் ரொமப் சின்னப்பொண்ணு. என் கையில் இருந்த குழந்தை எனது அக்காவோட குழந்தை, நான் என்றால் அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அதனால் பெரும்பாலும் நான் வீட்டில் இருக்கும் நேரங்களில் என்னிடமே இருப்பாள். அதனால் அதைப்பார்த்து எனக்கு திருமணமாகி விட்டதாக தவறாக நினைத்து என்னை ஓரங்கட்டி விடாதீர்கள் என்று தன்னை சந்திக்கும் டைரக்டர்களிடம் விளக்கமளித்து வருகிறார் ரித்விகா.