நடிகைகளை கலாய்க்கும் கழுகு கிருஷ்ணா!

கழுகு படத்தில் நடித்த கிருஷ்ணாவின் மார்க்கெட் யாமிருக்க பயமேன் படத்தின் வெற்றிக்குப்பிறகு சூடு பிடித்திருக்கிறது. அதனால் வன்மம் படத்தில் விஜயசேதுபதியுடன் இணைந்து நடித்த அவர், தற்போது யட்சன் படத்தில் ஆர்யாவுடன் நடித்து வருகிறார். இந்த படத்தை கிருஷ்ணாவின் அண்ணனான டைரக்டர் விஷ்ணுவர்தன் இயக்குகிறார்.

இதில் வன்மம் படப்பிடிப்பு நடந்தபோது தனக்கு ஜோடியாக நடித்த சுனைனாவை அவ்வப்போது கிண்டல் செய்து கொண்டேயிருந்தாராம் கிருஷ்ணா. அதனால் அவரது தலையை கண்டாலே தெறித்து ஓடிக்கொண்டிருந்த சுனைனாவை, கேமரா முன்பு கொண்டு வருவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டதாம். இயக்குனருக்கு. அந்த அளவுக்கு அம்மணியை கலாய்த்து எடுத்து விட்டாராம்.


ஆனால் இதுபற்றி விஜயசேதுபதி கூறும்போது, கிருஷ்ணா ரொம்ப ஜாலி டைப். அதனால் சுனைனாவை கண்டு விட்டால் அவருக்கு உற்சாகம் பொங்கி விடும். எதையாவது சொல்லி கிண்டல் செய்து கொண்டேயிருந்தார். அதனால் அவர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் நாட்களில் கலகலப்புக்கு பஞ்சமே இல்லை என்கிறார். ஆனால், கிருஷ்ணாவின் இந்த ஜாலி அரட்டையை கோலிவுட்டில் உள்ளவர்கள், ஆர்யாதான் இத்தனை நாளும் கலாய்ப்பு மன்னனாக இருந்தார். ஆனால் இப்போது அவரையும் மிஞ்சும் அளவுக்கு மிகப்பெரிய கலாய்ப்பு மன்னனாக கிருஷ்ணா உருவாகி வருகிறார் என்கிறார்கள்.