வானவராயன் வல்லவராயன், சிகரம் தொடு ஆகிய படங்களில் நாயகியாக நடித்தவர் மோனல் கஜ்ஜார். அதையடுத்து அவருக்கு தமிழில் படங்கள் இல்லை. அதனால் ஏற்கனவே கமிட்டாகியிருந்த தெலுங்கு படங்களில் நடிக்க சென்று விட்டார். இந்த நிலையில், மோனல் கஜ்ஜாரை தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்த மேனேஜர் மும்பை சான் என்பவர், அவர் தன்னை ஏமாற்றி விட்டதாக புகார் கூறுகிறார். அதுபற்றி அவர் மேலும் கூறுகையில், குஜராத்திலுள்ள அகமதாபாத்தைச் சேர்ந்தவர் மோனல் கஜ்ஜார்.
அவரை முதலில் கிருஷ்ணா நடித்த வானவராயன் வல்லவராயன் படத்தில் நடிக்க நான்தான் சான்ஸ் வாங்கிக்கொடுத்தேன். அவருக்கு சம்பளமாக 15 லட்சம் பேசப்பட்டது. அதையடுத்து, விக்ரம் பிரபு நடித்த சிகரம் தொடு படத்தில் நடிக்க 25 லட்சம் சம்பளம் வாங்கிக்கொடுத்தேன். எனக்கு கமிஷனாக 15 சதவிகிதம் பேசப்பட்டது. ஆனால், இரண்டு படத்துக்கும் சேர்த்து வெறும் 25 ஆயிரம் மட்டுமே மோனல் கொடுத்தார்.
அதன்பிறகு என்னிடம் பிரச்சினை செய்து கொண்டு வெவ்வேறு மேனேஜர்களை தேடிச்சென்றார். அந்த வகையில் எனக்கு பிறகு 11 மேனேஜர்களை நியமித்த மோனல் கஜ்ஜாருக்கு தற்போது ஒரு மேனேஜர்கூட கிடையாது. காரணம், தனக்காக உழைப்பவர்களுக்கு எதுவுமே செய்ய மாட்டார். அதோடு, அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார் என்றால், அங்கு காரில் ஏறுவதில இருந்து பின்னர் விமானத்தில் ஏறி சென்னைக்கு வருபவர், தான் ஒரு காபி குடித்தால்கூட அதை தயாரிப்பாளர் கணக்கில்தான் எழுதுவார். அதோடு சென்னையில் அவர் பைவ் ஸ்டார் ஹோட்டலில் தங்குகிறார் என்றால், தனக்கு அடுத்த அறையில் தனது உதவியாளர்களும் பைவ் ஸ்டார் ஹோட்டலில்தான் தங்க வேண்டும் என்று அடம் பிடிப்பார். அது மட்டுமில்லாமல், படப்பிடிப்பிலும் சரியாக கலந்து கொள்வதில்லை. அவ்வப்போது வயிற்று வலி. தலைவலி என்று சொல்லிக்கொண்டு ஹோட்டல் அறையிலேயே டேரா போட்ட விடுவார் என்று கூறும் அவர், மோனலின் நிஜ கேரக்டர் பற்றி வெளியில் சொல்லாமல் நான் கமிட் பண்ணி கொடுத்து இரண்டு படங்களிலும் நடிக்க வைத்தேன். ஆனால் இப்போது அவரது கேரக்டர் சினிமா உலகத்துக்கு தெரிந்து விட்டது. அதனால்தான் புதிய படங்களுக்கு யாரும் அவரை ஒப்பந்தம் செய்யவில்லை என்கிறார்.