சூதாடியில் இறங்குகிறார் தனுஷ்!

வேலையில்லா பட்டதாரி படத்தின் வெற்றிக்கு பிறகு புது உற்சாகத்துடன் நடித்துக்கொண்டிருக்கிறார் தனுஷ். அதையடுத்து, கே.வி.ஆனந்த் இயக்கத்தில் நடித்து வந்த அனேகன் படத்தை முடித்து விட்டவர், அதற்கு முன்பிருந்தே நடித்து வந்த ஷமிதாப் படத்தின் படப்பிடிப்பையும் இந்த மாதம் 6-ந் தேதியோடு முடித்துக் கொடுக்கிறார்.அதனால் அதற்கடுத்து வேலையில்லா பட்டதாரி படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.

என்ற போதும், தன்னை வைத்து பொல்லாதவன், ஆடுகளம் படங்களை இயக்கிய வெற்றிமாறன் அடுத்து தன்னை வைத்து இயக்கும் சூதாடியில் முழுவீச்சில் இறங்கயிருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏறகனவே நடைபெற்றதாக கூறப்பட்டாலும், இனிமேல்தான் படப்பிடிப்பு தொடங்குகிறது என்கிறார்கள்.

மேலும், இந்த படத்தில் தனுசுடன் பார்த்திபனும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அதோடு, ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது பெற்ற தனுஷ், சில ஆண்டு இடைவெளிக்குப்பிறகு மீண்டும் வெற்றி மாறனுடன் கைகோர்ப்பதால் இந்த படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருக்கிறது.