ஹிந்தியில் வேலையில்லா பட்டதாரி...! தனுஷே ஹீரோவாக நடிக்கிறார்...!

இந்த வருடம் வெளியான படங்களில் உண்மையிலேயே வணிக ரீதியில் வெற்றியடைந்த படம் - வேலையில்லா பட்டதாரி. இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் ஹிட் படம் என அனைத்து தரப்பினராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்ட வேலையில்லா பட்டதாரி 75வது நாளைக்கடந்து 100 அவது நாளை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் வேல்ராஜை, இயக்குனராக்கி தனஷ் தயாரித்த இந்தப் படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் மதன் வாங்கி வெளியிட்டார். தனுஷின் அடுத்தடுத்த படங்களையும் மதனுக்கே தரவதாக சொல்லி இருக்கிறாராம் தனுஷ். எனவே வேலையில்லா பட்டதாரி படத்தை எப்பாடுபட்டாவது 100 நாள் வரை ஓட்ட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் மதன்.


தனுஷின் கேரியரிலேயே மிக முக்கிய படமாக அமைந்துவிட்ட வேலையில்லா பட்டதாரி படத்தை ஹிந்தியிலும் ரீமேக் செய்யவிருக்கிறார்கள். தனுஷ் நடித்த ரகுவரன் கேரக்டரில் முதலில் பிரபல ஹிந்தி ஹீரோ ஒருவரை நடிக்க வைக்கலாம் என எண்ணியிருந்தார்களாம். பிறகு அந்த முடிவை மாற்றிக்கொண்டு, ராஞ்சனா ஹிந்திப் படத்தில் நடித்ததன் மூலம் பாலிவுட் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள தனுஷ், தற்போது ஷமிதாப் படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். எனவே அவரின் புகழ் ஹிந்தியில் இன்னும் அதிகமாகியிருக்கிறது. அதனால்தான் தனுஷையே ஹிந்தியிலும் கதாநாயகனாக நடிக்க வைப்பது என்று முடிவு செய்துள்ளனர்.