தொழிலதிபருக்கு இரண்டாவது மனைவியாக மாட்டேன்! - ப்ரியாமணி தகவல்

தமிழ் சினிமாவில் நம்பர்-ஒன் நடிகையாக வேண்டியவர் ப்ரியாமணி. ஆனால் பருத்தி வீரன் படத்திற்காக தேசிய விருது பெற்ற அவர், பின்னர் மெகா படங்களாக நடிக்காமல் மெகா டைரக்டர் படங்களாக தேடினார். விளைவு, மணிரத்னத்தின் ராவணன் படவாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த படத்தில் ஐஸ்வர்யாராய் நாயகியாக நடித்திருந்தார். விளைவு, ப்ரியாமணிக்கு விக்ரமின் தங்கை வேடம்தான் கிடைத்தது. மெகா டைரக்டர் படம் என்று நம்பி நடித்து பெரிய குழிக்குள் விழுந்தார் ப்ரியாமணி.

அதையடுத்து அவரது மார்க்கெட்டும் படுத்துக்கொண்டது. அதனால், பிழைப்பு தேடி தெலுங்கு, கனனடம் என்று சென்ற ப்ரியாமணிக்கு இப்போது வரை அந்த மொழிகள்தான் ஆதரித்து வருகிறது.ஆனபோதும், ப்ரியாமணியின் மார்க்கெட் அடங்குவதற்கான சூழ்நிலை தெரிகிறது. அதனால் இந்த மரியாதையோடு திருமணம் செய்து கொண்டு செட்டிலாக முடிவெடுத்திருக்கிறாராம். இந்த தகவல் அறிந்த ஒரு பிரபல தொழிலதிபர், தனக்கு இரண்டாவது மனைவியாக வருமாறு ப்ரியாமணிக்கு அழைப்பு விடுத்திருக்கிறாராம்.

ஆனால், அதைக்கேட்டு டென்சனாகி விட்டாராம் ப்ரியாமணி. 40 வயது நடிகைகளே முதல் மனைவியாக சென்று கொண்டிருக்கும்போது, இரண்டாவது மனைவியாக போகும் அளவுக்கு எனக்கொன்றும் வயதாகி விடவிலலை என்று அந்த அழைப்பை நிராகரித்து விட்டாராம். அதோடு, ஏற்கனவே தான் ரகசியமாக காதலித்து வரும் ஒளிப்பதிவாளர் பற்றியும் இந்த இடத்தில் கூறியிருககும் ப்ரியாமணி, தொழிலதிபருக்கு இரண்டாவது மனைவி ஆவதை விட, ஒளிப்பதிவாளருக்கு முதல் மனைவி ஆவது எவ்வளவோ மேல் என்று கூறியுள்ளார்.