சிறந்த குணச்சித்திர நடிகர், வில்லன் நடிகர் என்று பெயர் பெற்றவர் பிரகாஷ்ராஜ். சில வருடங்களுக்கு முன் நாயகனாகவும் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும், அவருக்குப் பொருத்தமான படங்களை, கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தார். “மொழி, வெள்ளித் திரை, காஞ்சீவரம், அபியும் நானும், தோனி” ஆகிய படங்கள் ஒரு நாயகனாகவும் அவரை வேறு ஒரு பரிமாணத்தில் வெளிப்படுத்தியது. சில வருடங்களுக்கு முன் இயக்குனராகவும் மாறி கன்னடத்தில் 'நானு நன்னா கனசு' என்ற படத்தையும், தமிழில் 'தோனி, உன் சமையலறையில்' ஆகிய படங்களையும் இயக்கினார். தமிழ்த் திரையுலகில்
கடந்த பத்து வருடங்களுக்கும் மேலாக படங்களையும் தயாரித்து வருகிறார்.
அதே சமயம் தெலுங்குத் திரையுலகில் 'ஆகாடு' படத்தில் நடிக்காமல் சண்டை போட்டு விட்டு அவர் விலகியது, தெலுங்குத் திரையுலகிலும், ரசிகர்களிடத்திலும் அவரைப் பற்றிய சில தவறான செய்திகள் பரவ ஆரம்பித்தது. அந்தப் பிரச்சனையைப் பற்றி அவர் இதுவரை வெளிப்படையாக எதையும் பேசவில்லை.
ஆனால், உதவி இயக்குனர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பிரகாஷ்ராஜுக்குத் தெலுங்குத் திரையுலகில் நடிப்பதற்கு தடை விதிக்கும் வரை சென்றார்கள். இதனிடையே, பிரகாஷ்ராஜை தன்னுடைய படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ராம் சரண் இன்று வெளியாக உள்ள 'கோவிந்துடு அந்தாரிவாடிலே' படத்தில் நடிக்க வைத்தார். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு பவர்ஃபுல்லான கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். இந்தப் படம் வெளிவந்த பின் தன்னைப் பற்றிய தவறான செய்திகள் மறைந்து, மீண்டும் பழையபடி தெலுங்குத் திரையுலகமும், ரசிகர்களும் தன்னைக் கொண்டாடுவார்கள் என பிரகாஷ்ராஜ் நம்புவதாகச் சொல்கிறார்கள். அவருடைய நம்பிக்கை வீண் போகாமல் இருக்கட்டும்.