அலைபாயுதே மாதவன் தமிழில் மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், ரன் என பல ஹிட் படங்களில் நடித்தபோதும், வேட்டை படத்திற்கு பிறகு தமிழில் எதிர்பார்த்தபடி சரியான கதைகள் கிடைக்காததால் டோட்டல் கவனத்தையும் இந்தி படங்கள் மீது திருப்பி விட்டார். தற்போது தமிழில் ஒரு படத்திலும், இந்தியில் 3 படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
மேலும், இந்தியில் தனுஷ் நடித்த ராஞ்ஜனா படத்தை இயக்கிய ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் மாதவன் நடித்த தனு வெட்ஸ் மனு என்ற படம் 3 வருடங்களுக்கு முன்பு அவருக்கு மெகா ஹிட்டாக அமைந்தது. அதையடுத்து அவர் நடித்த எந்த இந்தி படமும் ஓடவில்லை.
அதனால்தான், ஒரு ஆங்கில படத்தில் நடிக்க கமிட்டான மாதவன், மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்க ஆசைப்பட்டார். அப்போதுதான் தமிழில் இறுதிச்சுற்று என்ற படம் அவருக்கு கிடைத்தது, இருப்பினும், இந்தியில் தனக்கான இடத்தை விட்டு விடக்கூடாது என்று இப்போது நினைக்கும் மாதவன், அதே ஆனந்த் எல்.ராயின் இயக்கத்தில் தனு வெட்ஸ் மனு படத்தின் 2ம் பாகத்தில் தற்போது நடித்துக்கொண்டிருக்கிறார். இப்படம் மூலம் இந்தியில் மீண்டும் தனக்கான வெற்றியை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கும் மாதவன், அப்படத்திற்கு போக மீதமிருக்கும் நாட்களைத்தான் தமிழில் நடிக்கும் படத்திற்கு கால்சீட் கொடுத்திருக்கிறாராம். அந்த அளவுக்கு மற்ற மொழிப்படங்களை விட இந்தி படங்களுக்கே முதலிடம் கொடுக்கிறார் மாதவன்.