கடந்த சில வருடங்களாக திரைப்பட நட்சத்திரங்களுக்கும், ரசிகர்களுக்கும் இணைப்புப் பாலமாக விளங்குவது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள்தான். ஏறக்குறைய எல்லா திரைப்பட நட்சத்திரங்களுமே ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் தங்களுக்கான கணக்கைத் தொடங்கி அதில் தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
தங்களின் அபிமான நட்சத்திரங்களின் அன்றாட நடவடிக்கைகளைத் அறிந்து கொள்வதற்காக ஃபேஸ்புக்கில் அவர்களுடைய அதிகாரபூர்வ பக்கத்தை லைக் செய்தும், ட்விட்டரில் அவர்களை பின்தொடர்ந்தும் வருகிறார்கள் ரசிகர்கள். பல நட்சத்திரங்கள் சமூக வலைத்தளங்களில் கணக்கு வைத்திருந்தாலும், ஒரு சில நட்சத்திரங்களே ஆக்ட்டிவ்வாக செயல்பட்டு வருகின்றனர். அவர்களில் ஒருவர்.. தனுஷ். தனக்கான அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தையும், ட்விட்டர் கணக்கையும் துவங்கி அதில் தொடர்ந்து தன்னைப் பற்றியும், தன் படங்களைப் பற்றியும் செய்திகள் வெளியிட்டு வருகிறார். அதனாலோ என்னவோ, அதிகளவிலான ரசிகர்கள் தனுஷை ட்விட்டரில் பின்தொடரத் தொடங்கியுள்ளார்கள்.
குறிப்பாக, வேலையில்லா பட்டதாரி படத்தின் சூப்பர்ஹிட் வெற்றிக்குப் பிறகு அவருக்கான ரசிகர் வட்டம் பெரிய அளவில் வளர்ச்சியடைந்தது. போதாக்குறைக்கு, ஹிந்தியிலும் கொலவெறி பாடலின் புகழ், ரான்ஜ்னாவின் வெற்றி, அமிதாப்புடன் இணைந்து நடிக்கும் ஷமிதாப் என தனுஷிற்கு வட இந்திய ரசிகர்களும் பெரிய அளவில் இருக்கிறார்கள். இதனால் நடிகர் தனுஷை ட்விட்டரில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை தற்போது 10 லட்சத்தை எட்டியுள்ளது. இன்னொரு பக்கம், அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தையும் 14 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் லைக் செய்துள்ளனர்.