சுந்தர்.சி இயக்கத்தில் தீயா வேலை செய்யனும் குமாரு படத்தில் நடித்த ஹன்சிகா, இப்போது அரண்மனை படத்திலும் நடித்துள்ளார். முன்னணியில் இருக்கும் நடிகை என்றபோதும், அந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க ஆண்ட்ரியாவுக்கு வழி விட்டு தான் ப்ளாஸ்பேக்கில் வந்து செல்லும் ஒரு வேடத்திலேயே நடித்திருந்தார். அதனால்தான் அரண்மனை ஆடியோ விழாவில், இன்றைக்கு ஹன்சிகாவின் மார்க்கெட் கெட்டியாக உள்ளது.
ஆனபோது அவர் இந்த படத்தில் இப்படியொரு வேடத்தில் நடித்தது எனக்கே ஆச்சர்யமாக உள்ளது என்றார்.அதோடு, தான் சொன்ன ஒரே காரணத்திற்காக சிறிய வேடத்தில்கூட தயங்காமல் நடித்ததால் தற்போது தான் விஷாலை வைத்து இயககி வரும் ஆம்பள படத்தில் ஹன்சிகாவை நாயகியாக்கியிருக்கும் சுந்தர்.சி., அவரது இன்னொரு முகத்தை காண்பிக்கும் வகையில் ஹன்சிகாவின் கதாபாத்திரத்திற்கு சில வெயிட்டான காட்சிகளையும் சேர்த்திருக்கிறாராம்.
அதனால் அரண்மனையை விட இந்த படம் ஹன்சிகாவை நல்லதொரு பர்பாமென்ஸ் ஆர்ட்டிஸ்டாக வெளிப்படுத்துமாம். ஆக, தற்போது நடித்து வரும் ரோமியோ ஜூலியட், மீகாமன் படங்களைக் காட்டிலும் ஆம்பள படம் ஹன்சிகாவுக்கு சொல்லிக் கொள்ளும்படியாக இருக்குமாம். அதோடு, மீகாமன் படத்தைப் போலவே இந்த படத்திலும் ஒரு பாடல் காட்சியில் படுகவர்ச்சியாக நடிக்கிறாராம் ஹன்சிகா. இளவட்ட ரசிகர்களின் ரசணைக்கு தீனி போடவே இந்த கிளாமர் ரூட்டை கடைபிடித்து வருகிறாராம்.