சத்தமில்லாமல் உதவி செய்யும் நயன்தாரா!

சினிமா நடிகர் நடிகைகளில் இரண்டு ரகம் உண்டு. ஒன்று தாங்கள் செய்யும் உதவியை வெளியில் தெரியாமல் செய்வது. இன்னொன்று ஒரு லட்சம் உதவி செய்தால்கூட அதை பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்து 10 லட்சம் அளவுக்கு பப்ளிசிட்டியை தேடிக்கொள்வது. இதில் முதல் ரகத்தை சேர்ந்தவர்தான் நயன்தாரா.

இவர் இதுவரை செய்த உதவிகளில் சுனாமி நிவாரண நிதிக்காக 10 லட்சம் கொடுத்தது மட்டும்தான் வெளியில் தெரியும்.மற்றபடி தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கு எவ்வளவோ உதவிகளை செய்திருக்கிறார் நயன்தாரா. ஆனால் அதையெல்லாம் அவர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. வலது கை கொடுப்பது இடது கைககு தெரியக்கூடாது என்ற பாலிஸியை அவர் கடை பிடித்து வருகிறார்.


ஆனபோதும், அவரால் பலன் பெற்ற திரையுலகினரால் அதை சொல்லாமல் இருக்க முடியவில்லை. சில பட அதிபர்கள் தனக்கு தர வேண்டிய ச்ம்பளத்தில் முக்கால்வாசியை தந்த பின்னர், மீதமுள்ள தொகையை அவர்களால் தர முடியாத நிலை ஏற்பட்டால், பெரிய மனசு பண்ணி அதை விட்டுக்கொடுத்து விடுவாராம் நயன்தாரா. அதேபோல், புதுமுக டைரக்டர்கள் தன் கண்ணெதிரே கஷ்டப்படுவதை பார்த்தால், தன்னால் இயன்ற பண உதவியை செய்வாராம்.

இதற்கெல்லாம் மேலாக தன்னைச் சுற்றியிருக்கும் மேக்கப்மேன், காஸ்டியூமர், ஹேர் டிரஸ்ஸர் உள்பட பலருக்கு தொடர்ந்து உதவிகளை செய்து வருகிறாராம். இதை யாரிடமும் நயன்தாரா சொல்லாதபோதும், அவரிடம் உதவி பெற்றவர்கள் அவரது இளகிய மனசு பற்றி பெருமையாக சொல்கிறார்கள்.