ஆண்கள் குளிர் காலத்தில் தனது சருமத்தை பராமரித்துக் கொள்ளும் முறை.

சரும பராமரிப்பு என்று வரும் பொழுது ஆண்கள் பெண்கள் என்ற பேதம் இருப்பதில்லை. இன்றைய ஆண்கள் பளபளக்கும், நல்ல தோல் பகுதியை பெருமையாக கருதுகிறார்கள். குளிர்காலம் தொடங்கும் போது கூடவே தோல் தொடர்பான பிரச்சனைகளும் படையெடுக்கத் தொடங்குகின்றன. குளிர்காலத்தில் நிலவும் வறட்சி மற்றும் குளிர்காற்றினால் ஆண்களின் தோல் வறட்சியடைந்து விடும். தோலில் போதுமான அளவு ஈரப்பதம் இல்லாததால், உங்களுடைய முகம் மற்றும் உடல் பகுதிகளில் அரிப்புகள் ஏற்படும். ஈரப்பதம் உருவாக்கும் லோஷன்களை தடவுவதன் மூலம் உங்கள் உடலுக்கு போதுமான அளவு ஈரப்பதம் இருப்பதை உறுதிப்படுத்துங்கள். பெண்களின் தோலை விட ஆண்களின் தோல் அதிக கடினத்தன்மை கொண்டிருப்பதால், ஆண்களுக்காக பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட கிரீம்களை பயன்படுத்தவும். பெண்களுக்கு தயாரிக்கப்பட்ட கிரீம்களை பயன்படுத்தினால் பலன் குறைவாகவே இருக்கும்.
 மேலும், உங்கள் முகம் மற்றும் உடல் பகுதிக்கென தனித்தனியான கிரீம்களை தேர்ந்தெடுக்க வேண்டியதும் அவசியம். உடலின் பிற பகுதிகளை விட முகத்தின் தோல் பகுதி சற்றே மாறுபட்டிருக்கும். உதடுகளில் ஈரப்பதம் உண்டாக்கும் களிம்புகளை அவ்வப்போது தடவி அதனை ஈரமாகவும், மென்மையாகவும் வைக்க வெட்கப்பட வேண்டாம். வெடித்துக் கிடக்கும் உங்கள் உதடுகளைப் பார்த்து கன்னிகள் மயங்கி விடுவார்கள் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது! இரவிலும் குளிரைத் தாக்குப்பிடிக்கும் வகையில் ஈரப்பதத்தை தக்க வைக்கும் கிரீம்களை தடவ வேண்டியது அவசியம். குளிர்காலத்தில் நாம் பெரும்பாலும் மறக்கக்கூடிய விஷயங்களில் ஒன்று போதிய அளவு தண்ணீரை உடலுக்கு கொடுக்காமல் இருப்பதே. இதன் காரணமாகவே நிறைய தோல் தொடர்பான பிரச்சனைகள் வருகின்றன.

முகப்பருக்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள், குளிர்காலம் கொண்டு வரும் வறண்ட, குளிரான காற்றால் மேலும் மோசமாக பாதிக்கப்படாமல் இருக்க சற்றே அதீத கவனத்துடன் இருக்க வேண்டும். வறட்சியின் காரணமாக எண்ணெய் சுரப்பிகள் அதிகளவு எண்ணெயை சுரப்பதால், தோலில் வெடிப்புகள் உண்டாகின்றன. குளிர் காற்றினால் உங்களுடைய தோல் வேகமாக வறண்டு விடுவதால் தோல் சொரசொரப்பாகவும், அரிப்பினால் உருவான தடிப்புகளுடனும் மாறிவிடும். எனவே, உங்கள் உடலை தண்ணீர் அளவு குறையாமல் பாதுகாப்பதும், இறந்த செல்களை கொண்ட தோலை அகற்றுவதும் முக்கியமான செயல்களாக எண்ணி செயல்படவும். குளிரின் காரணமாக உங்கள் உதடுகள் பலமுறை நடுங்கத் தொடங்குவதால், அவை சப்பையாக மாறிவிடும். எனவே, ஈரப்பதத்தை தக்க வைக்கும் களிப்புகளை உங்கள் உதடுகளில் தடவு இந்த பிரச்சனையிலிருந்து விடுபட தயங்க வேண்டாம். நமது கைகளின் பின் பகுதியில் உள்ள தோல் பகுதி மிகவும் மென்மையாக இருக்கும். குளிர்காலத்தில் இந்த தோல் பகுதியில் வெடிப்புகள் மற்றும் சுருக்கங்கள் உருவாகும். எனவே, ஈரப்பதத்துடன் கைகளை வைத்துக் கொள்வதும், கையுறைகள் அணிவதும் முக்கியமானதாகும்.

குளிர்காலம் உங்களுடைய SPF லோஷன்களை முழுமையாக பயன்படுத்தும் காலமல்ல. குளிர்காலத்தில் சூரியக் கதிர்களிலிருந்து பாதுகாக்க உதவும் இந்த லோஷன்களை சற்றே குறைத்து பயன்படுத்தினால், வறட்சியையும், குளிர்காற்றையும் சமாளிக்க முடியும். உங்களுக்கு கதகதப்பான ஸ்டீம் பாத் டப் அல்லது ஷவர் குளியல் நன்றாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால், ஏற்கனவே வறண்டு போய், குளிரில் நடுங்கும் தோலுக்கு அது கொண்டு வரும் பாதிப்பையும் சற்றே கணக்கில் கொள்ளுங்கள். எனவே, மிகவும் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்து ஈரப்பதத்தை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் அதிகம் கவனிக்கப்பட வேண்டிய பகுதிகளாக ஏற்கனவே அதிக சுருக்கங்கள் நிறைந்த இந்த பகுதிகள் உள்ளன. ஷீ வெண்ணெய், மினரல் ஆயில், தேநீர் மர எண்ணெய்ய் அல்லது கிளிசரின் ஆகியவை கலந்த பொருட்களை பயன்டுத்தி தோலை ஈரமாகவும், மென்மையாகவும் வைத்திருக்க முயற்சிக்கவும்.

குளிர்காலத்தில் வெகுவேகமாக வெடித்துக் கொண்டு போகும் உங்களுடைய பாதங்களை சற்றே கவனியுங்கள். இதனை தொடர்ந்து கவனிக்காமல் விட்டால் வலி மிகவும் அதிகமாகும். இதற்கு சற்றே கெட்டியாக இருக்கும் ஈரப்பத களிம்பை பயன்படுத்தவும் மற்றும் பாதங்களை சாக்ஸ்களை பயன்படுத்தி எப்பொழுதும் மூடியே வைக்கவும். குளிர்காலத்தில் ஸ்கால்ப்பில் வறட்சி ஏற்படுவதால், அரிப்புகள், பொடுகுத் தொல்லை போன்றவற்றை சந்திக்க நேரிடும். எனவே ஸ்கால்ப் மிகவும் வறண்டு விடாமலிருக்க ஈரப்பதத்தை உருவாக்கும் பொருட்களை தலையில் பயன்படுத்தவும். குளிர்காலத்தில் அடிக்கடி தண்ணீர் குடித்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும் என்று எண்ணிக் கொண்டு, போதுமான அளவு தண்ணீர் குடிக்காமல் இருக்க வேண்டாம். குளிர்காலத்தில் வியர்வை வராமலிருந்தாலும், போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டியதும் அவசியமாகும். எனவே மென்மையாக இருக்கவும், மிருதுவாகவும் தோலை வைக்க