ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படத்தை தயாரித்தவர் சுபாஷ்கரன் அல்லிராஜா. இவர் லண்டனை தலைமையகமாகக் கொண்டு லைகா மொபைல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு தொழில்ரீதியாக இவர் நெருக்கமானவர் என்பதினால்தான் லைகாபேனரில் கத்தி படம் தமிழ்நாடடில் வெளியாகக்கூடாது என்று பலத்த எதிர்ப்பு எழுந்தது.
அதையடுத்து பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, தீபாவளிக்கு வெளியே வந்த கத்தி வெற்றிகரமாகவும் ஓடிக்கொண்டிருக்கிறது. அதனால் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில், நேற்று லைகா குழுவினர், மாலத்தீவில் இருந்து லண்டன் செல்ல திட்டமிட்டார்களாம். அதையடுத்து அவர்கள் விமானத்தில் பயணித்தபோது, அவர்களது விமானம் கொழும்பில் தரையிறங்கி லண்டன் புறப்பட தயார்நிலையில் நின்றதாம்.
அப்போது, சுபாஷ்காரன் அல்லிராஜாவின் பாஸ்போர்டுடன் விமானத்துக்குள் வந்த புலனாய்வு அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கீழே இறக்கி அழைத்து சென்றார்களாம். அதை அடுத்து சுபாஷ்கரன் கைது செய்யப்பட்டதாக இலங்கையில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் அவரை எதற்காக கைது செய்தார்கள் என்பது பற்றிய தகவல்களை இலங்கை விமான நிலைய அதிகாரிகள் வெளியிட மறுத்து விட்டார்களாம்.