சிம்புவின் சினிமா தோழிகளில் த்ரிஷாதான் அவருக்கு முதல் தோழியாம். பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே நட்பாக பழகி வருகிறார்களாம். அதனால்தான் அலை, விண்ணைத்தாண்டி வருவாயா படங்களில் அவர்களின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்அவுட் ஆனதாம். மேலும், சினிமாவில் நடிக்காத நேரங்களிலும் இருவரும் அவ்வப்போது சந்தித்து பேசிக் கொள்வார்களாம். அப்படியொரு உறுதியான நட்பு இன்றுவரை நீடித்து வருகிறதாம்.
ஆனால், நட்பை கடந்து தான் காதல் வயப்பட்ட நயன்தாரா, ஹன்சிகாவை மட்டுமே அதன்பிறகு சந்தித்தாலும் ஹாய் சொல்வதோடு நிறுத்திக் கொண்டு வருவதாக சொல்கிறார் சிம்பு. மேலும், நயன்தாராவுடன் மீண்டும் இது நம்ம ஆளு படத்தில் நடிக்கிறேன் என்றாலும், அந்த பழைய நட்பு ஏற்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் அவர்கள் என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை.
நயன்தாரா- ஹன்சிகா இருவரையுமே நான் உயிருக்கு உயிராக உண்மையாகத் தான் காதலித்தேன். ஆனால் அவர்களோ, மதம் மாறுவது போன்று எளிதாக மாறி விட்டார்கள். மனசையும் மாற்றிக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் இருவர் மீதும் நான் வைத்திருந்தது உண்மையான காதல். இதை அவர்கள் புரிந்து கொள்ளாதபோது நான் என்ன செய்ய முடியும் என்கிறார் சிம்பு.