அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர், நடிகர் முத்துராமனின் மகன் கார்த்திக். அதன்பின்னர் முன்னணி நடிகராக உயர்ந்து தமிழ் சினிமாவின் நவரசநாயகனாக வலம் வந்தார். இப்போது அவரது மகன் கெளதம் கார்த்திக் சினிமாவில் நடிக்க வந்துவிட்டார். தற்போது அப்பாவும், மகனும் சினிமாவில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் கார்த்திக்கிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் நீண்ட நாட்களாக சொத்து தகராறு நடந்து வரும் வேளையில், இப்பிரச்னை தொடர்பாக நடிகர் கார்த்தி திடீரென வீட்டை வெளியேறிவிட்டதாகவும், தற்போது அவர் தனியாக தங்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நேற்று சென்னை, தேனாம்பேட்டை போலீசில் நடிகர் கார்த்தி புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, ஆழ்வார்பேட்டையில் என் தந்தைக்கு சொந்தமான சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்தில் எனக்கு எதுவும் பங்கு கிடையாது என்று எனது சகோதரர் என்னை வெளியேறும்படி கூறுகிறார். மேலும் உயிலில் எனது பெயரும் இல்லை. எனது சகோதரர் எனது சொத்தை மோசடி செய்துள்ளார். அவரிடமிருந்து என் சொத்துக்களை மீட்டு தரும்படி கேட்டு கொள்கிறேன். மேலும் எனக்கும் உரிய பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.